கேரளாவை சேர்ந்த 17 வயது சிறுமி யூடியூபில் வீடியோ பார்த்து குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் இது பெற்றோருக்கு தெரியாமல் இருந்துள்ளது. மேலும் சிறுமியின் தாயார் கண்பார்வை தெளிவில்லாதவர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மாணவி தனது படுக்கை அறையில் வைத்து யூடியூபில் வீடியோ பார்த்து குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஆனால் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சிறுமி பெற்றோரிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். சிறுமி அண்டை வீட்டை சேர்ந்த 21 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தது இரு வீட்டினருக்கும் தெரியும் என கூறப்படுகிறது. ஆனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததை குடும்பத்தினரிடம் மறைத்துள்ளனர். சிறுமி ஆன்லைன் வகுப்பில் பாடம் படிப்பதாக கூறி தனது அறையை விட்டு அதிகம் வெளியே வராமலேயே இருந்துள்ளார்.
இதனால் அவரது குடும்பத்தினருக்கு இது குறித்து தெரியாமல் இருந்துள்ளது. தற்பொழுது சிறுமி யூ டியூப் மூலமாக வீடியோவை பார்த்து குழந்தை பெற்ற நிலையில் பெற்றோருக்கு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் பார்த்த பொழுது குழந்தை இருந்துள்ளது. இதனையடுத்து விவரமறிந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்பொழுது குழந்தை மற்றும் சிறுமி இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் அண்டை வீட்டை சேர்ந்த 21 வயது இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…
சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…