வயிறு வலிக்குது என கதறிய சிறுமி – பரிசோதனை செய்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Default Image

வயிறு வலிக்குது என கதறிய சிறுமியை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 வயது சிறுமி ஒருவர் தனக்கு மிக வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் சிறுமிக்கு என்ன இருக்கப்போகிறது வயிற்றில் ஏதேனும் பிரச்சினை இருக்குமோ என்ற சந்தேகத்தால் மருத்துவர்களிடம் சிறுமியை கூட்டி சென்று பரிசோதித்தனர். அப்பொழுது அந்தப் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த சிறுமி 8 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். மருத்துவ அறிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியை விசாரித்தபோது அப்பகுதியில் உள்ள வடா பாவ் விற்கக்கூடிய நபர் தான் இதற்கு காரணம் என அவர் கூறியதை அடுத்து பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட தகவல் அறிந்து அந்த நபர் ஊரை விட்டு ஓடி உள்ள நிலையில் அந்த நபரின் முழு பெயர் சரியாக தெரியாததால் போலீசார் அவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி உள்ளனர். மேலும் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து அந்த நபர் குறித்து கேள்விப்படும் பொழுது கண்டிப்பாக கூற வேண்டும் என போலீஸார் எச்சரித்துள்ளதுடன் அது குறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் தனது சொந்த ஊரான பீகாருக்கு சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நவிமும்பை திரும்பி வந்ததாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடம் சிறுமியின் கர்ப்பம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் மீது 2018 ஆம் ஆண்டு ஒரு சிறுமியை கடத்தியது மற்றும் மற்றொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் ஆகியவற்றிற்காக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
mk stalin
Santhanam DD Next level trailer
Premalatha Vijayakanth
premalatha vijayakanth
Kolkata FireAccident
Manjolai - TN Govt