நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்பு நடைபெறுவதாக புகார் அளித்த 6 வயது சிறுமி. சிறுமியின் புகார் எதிரொலியால், மீரில் அம்மாநில நிர்வாகம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த, நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி கூறுகையில், எனது ஆன்லைன் வகுப்பு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிக்கு முடிகிறது.
ஆங்கிலம், கணிதம், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களும் நடத்தப்படுகிறது. பின்னர் கம்ப்யூட்டர் வகுப்புகள் நடக்கிறது இதனால் குழந்தைகளுக்கு அதிக வேலை இருக்கிறது. எதற்காக சின்ன குழந்தைகள் இந்த அதிக விலை எதிர்கொள்ள வேண்டும். என்ன செய்வது மோடி ஐயா…? வணக்கம். இவ்வாறு என்ற சிறுமி கூறியிருந்தார். இந்த வீடியோவை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில்,சிறுமியின் இந்த வீடியோ எதிரொலியால், காஷ்மீரில் அம்மாநில நிர்வாகம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த, நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொடக்கக்கல்விக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கு அரை மணி நேரமும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் ஆன்லைன் வகுப்பு நடத்த நேரம் ஒதுக்கப்படுவதாகவும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரத்துக்கு மிகாமலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…
பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி…