குஜராத் காவல்துறையினர் நித்தியானந்தாவை குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்ய தேடி வரும் நிலையில் அவர் ஆன்லைன் மூலமாக தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பு தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் அகமதாபாத் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவர் கூறுகையில் , நான் குருகுலத்தில் 2013 -ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இருந்தேன். நான் ஒரு சன்னியாசியாக அங்கு இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்து தான் அங்கு நான் சேர்ந்தேன். யோகா பூஜை என அனைத்தும் நன்றாக இருந்தது.
அதேபோல சிறந்த கல்வியும் அங்கு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வருடம் நாங்கள் குஜராத் ஆசிரமத்திற்கு மாறினோம். நித்யானந்தா இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிறகு பல நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சென்று பங்கேற்றோம். பின்னர் நான் இந்தியாவில் இருந்தேன். எனது இரண்டு அக்கா மற்றும் அவர்களுடன் இரண்டு பேர் வெளிநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
எனது ஒரு அக்காவான தத்துவ பிரியா மட்டும் திரும்பவில்லை. நிந்திகா அக்கா மட்டும் வந்தார். நான் அவரிடம் தத்துவபிரியா எங்கே என கேட்டேன் அவர் சாமியுடன் சென்று விடுவதாக கூறினார். அவர் இன்னும் நித்தியானந்தா கூடவே இருக்கிறார்.
நித்திகா நிகழ்ச்சிகளின் தலைமை நிர்வாகி. எங்கள் இருவரிடம் அதிக சக்திகள் இருந்ததால் நாங்கள் பல பேரிடம் சென்று பணம் மற்றும் இடத்தை வாங்கினோம். அதன் பிறகு நித்திகா மீது அதிக அழுத்தம் குருகுலம் கொடுத்தது.அதில் ஓன்று அம்மா, அப்பா என யாரையும் பார்க்கக் கூடாது என கூறினார்கள்.
அதன்பின்னர் மூன்றாம் கண் மூலம் எங்களுக்கு சக்திகள் கற்றுக் கொடுத்தார். அதை வைத்து அதனை நாங்கள் வெளிப்படுத்தினோம். இதை தொடர்ந்து அமைச்சர்கள் , சினிமா பிரபலங்கள் என பலரை சந்தித்து நிதி திரட்டினர். இது தொடர்ந்து எங்களுக்கு நித்தியானந்தா இலக்கு நிர்ணயித்தார். எங்களுக்கு இலக்காகக் 8 கோடி வரை கொடுக்கப்பட்டது.
மூன்றாம் கண் மூலம் நூறு சக்திகளை எங்களுக்கு சொல்லிக் கொடுத்து. அதன்மூலம் பணத்தை நாங்கள் திரட்டினோம். ஆண்டாள் விவகாரத்தில் எங்க அக்கா தவற பேசியதெல்லாம் சாமி சொல்லிக் கொடுத்துதான் எனக் கூறினார்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…