டிக் டாக் மோகத்தால் சீருடை இல்லாமல் லாக்-கப்பில் குத்தாட்டம் போட்ட பெண் காவலர் சஸ்பெண்ட்
குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணி செய்து வந்தவர் அர்பிதா சவுத்ரி.இவர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்து உள்ளார்.
இந்த டிக் டாக்கில் மற்றவர்களை போல தாமும் வீடியோ செய்து வெளியிட வேண்டும் என எண்ணி உள்ளார்.இதை தொடர்ந்து பெண் காவலர் அர்பிதா சவுத்ரி காவல் நிலையத்தில் உள்ள லாக் அப்பில் சீருடை இல்லாமல் இந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளார்.
அர்பிதா சவுத்ரி குத்தாட்டம் போட்ட வீடியோவை டிக் டாக் செயலியில் பதிவு செய்து உள்ளார்.இந்த வீடீயோவை பார்த்த பலர் காவல் நிலையத்தில் ஒரு காவலர் பொறுப்பு இல்லாமல் இப்படியா ஆட்டம் போடுவது? என கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் பெண் காவலர் அர்பிதா சவுத்ரி இடைநீக்கம் செய்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவு விட்டார்.இது குறித்து துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா கூறுகையில் , பணி நேரத்தில் சீருடை இல்லாமல் இருந்து உள்ளார்.மேலும் காவல் நிலையத்தில் வீடியோ எடுத்து உள்ளார்.
Lady police constable in Mahesana district of North Gujarat faces disciplinary action after her TikTok video shot in police station goes viral pic.twitter.com/7NWXpXCh8r
— DeshGujarat (@DeshGujarat) July 24, 2019
அது மட்டுமல்லாமல் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை மீறி உள்ளார்.அதனால் பெண் காவலர் அர்பிதாவை இடைநீக்கம் செய்து உள்ளதாக கூறினார்.