ஏழை இஸ்லாமிய மாணவர் ஒருவருக்கு பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி என்னும் இடத்தை சேர்ந்த ஒரு ஏழை இஸ்லாமிய மாணவர் ரியாஸ் என்பவருக்கு பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை வழங்கியுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். ஜனாதிபதி மாளிகையில் வைத்து குடியரசுத் தலைவர் கொடுத்த சைக்கிளை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். ரியாசின் வாழ்க்கை வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவும், அவனது வாழ்க்கை பிறருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் எனவும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
ரியாஸ் பற்றி குடியரசு தலைவர் கூறும்பொழுது, டெல்லி சர்வோதயா வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரியாசின் தந்தை சமையல்காரராக மிக குறைந்த ஊதியத்துடன் வேலை பார்ப்பவர். இவருக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளார். எனவே குடும்ப வறுமை காரணத்தால் ரியாஸ் தன்னுடைய படிப்பை பார்த்துக் கொண்டிருந்தாலும், ஓய்வு நேரத்தில் பாத்திரம் கழுவி குடும்பத்தை நடத்தி வருகிறார். ஆனால் ரியாசுக்கு முழுவதும் சைக்கிள் ஓட்டுவது ஆர்வம்.
2017 ஆம் ஆண்டு டெல்லி மாநில சைக்கிள் ஓட்டுதலில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரும், தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் நான்காம் இடம் பிடித்தவர் ரியாஸ். இவ்வளவு சாதனைகள் செய்திருந்தாலும் சைக்கிள் சொந்தமாக கிடையாது. இந்திராகாந்தி பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் இவர், பயிற்சிக்கு வரும் பொழுதெல்லாம் வாடகைக்கு அல்லது கடனுக்குத்தான் சைக்கிளை வாங்கி வந்து பயிற்சி எடுத்து வருகிறார். ரியாஸின் கனவை நனவாக்க தற்பொழுது உடனடியாக தேவை சைக்கிள் தான் என்பதை ஊடக வாயிலாக அறிந்து தான் குடியரசுத் தலைவர் இந்த சைக்கிளை பரிசளித்தளித்ததாக கூறி உள்ளார். மேலும் ரியாஸின் வாழ்க்கை தன்னம்பிக்கைக்கு உரியது, அவர் வாழ்வின் மிகப்பெரிய வெற்றியைப் பெறவேண்டும் எனவும் ராம்நாத் கோவிந்த் வாழ்த்தியுள்ளார்.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…