கொரோனா பாதிப்பு அதிகரிக்க பொது மக்கள் தான் காரணம் – மகாராஷ்டிர சுகாதாரத்துறை அதிகாரிகள்!
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததற்கு பொது மக்கள்தான் காரணம் என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருந்த நேரத்தில் இந்தியாவிலேயே அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருந்தது. அதன் பின் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகள் விதிக்கப்பட்டதை அடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர சுகாதாரத்துறை அதிகாரிகள், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு பொது மக்கள் தான் காரணம் என கூறியுள்ளனர். மேலும், மகாராஷ்டிரா கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறும்போது தொற்று அதிகரித்துள்ள காலத்தில் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை படி நடந்து கொள்ளவில்லை எனவும், பொதுமக்களின் ஒழுக்கமற்ற தன்மையும் அலட்சியமும் தான் தொற்று அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.