மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதிக்கும் வைரல் வீடியோ.!
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி குதித்துள்ளார், ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதால், தற்காத்துக் கொள்ள ஓடும் வாகனத்திலிருந்து வெளியில் குதித்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் சையத் அக்பர் ஹமீது, கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், தலையில் காயம் அடைந்த பாதிக்கப்பட்ட சிறுமி, இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, அந்த வீடியோவில் சிறுமி ஆட்டோவில் இருந்து குதித்தவுடன் அவருக்கு உதவி செய்ய பலர் ஓடி வருவது தெரிந்தது. சாலையில் கிடந்த சிறுமிக்கு உதவ மற்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அவுரங்காபாத்தில் உள்ள கிராந்தி சௌக் காவல்நிலையத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உஸ்மான்புரா பகுதியில் இருந்து சிறுமி ஆட்டோவில் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனர் சிறுமியை ஆபாசமாகப் பேசி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், அதன் பிறகு தனக்கு ஏதோ பிரச்சனை என்று சிறுமி புரிந்துகொண்டார், அந்த நேரத்தில் ஓடும் வண்டியிலிருந்து வெளியே குதித்துள்ளார். சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்பத் தரடே கூறியுள்ளார்.
#CaughtOnCamera: Minor girl in #Aurangabad jumps off speeding auto to save herself from molester driver#Minor #Minorgirl #India #IndiaNews pic.twitter.com/luQ5M3EVOs
— Free Press Journal (@fpjindia) November 16, 2022