ககன்யான் 2022ஆம் ஆண்டுதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷ்யாவும் உதவ முன்வந்தது.இதனால் வீரர்களுக்கு பயிற்சி இந்திய நிறுவனமான இஸ்ரோ ,ரஷ்யாவின் Glavkosmos நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்த நிறுவனம் இந்திய வீரர்கள் 4 பேரும் 25 சதவீத பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தது.ரஷ்யாவில் கொரோனா தடுப்பு நடைமுறை இந்திய விண்வெளி வீரர்களுக்கு உறுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் , இவர்களுக்கான அடுத்த கட்டப் பயிற்சிகள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,ககன்யான் 2022-ஆம் ஆண்டுதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. போதிய கால அவகாசம் உள்ளதால் இந்த திட்டம் தாமதம் அடையாது என்றும் ஊரடங்கு வாபஸ் பெறும் பட்சத்தில்தான் இஸ்ரோவின் அடுத்த கட்ட ஏவுதல் திட்டங்கள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…