வருங்காலம் நிச்சயம் இந்தியாவிற்கு தான், மோடிக்கு புகழாரம் – விளாடிமிர் புதின்.!
ரஷ்ய அதிபர் புதின், மோடி தலைமையிலான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யாவின் வால்டை விவாத கிளப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மோடியின் இந்திய வெளியுறவுக்கொள்கையைப் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். மோடியின் தலைமையில் இந்தியா, பொருளாதாரத்தில் சிறந்த நிலையை அடைந்துள்ளது.
மேலும் புதின் கூறியதாவது, மோடி தன்னை நாட்டுப்பற்றாளர் என்று கூறிக்கொள்ளும் வகையில் அவர், இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார். மோடியின், “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாகவும் சிறந்த யுக்தியாகவும் இந்தியாவை வளர்ச்சியடைய வைத்திருக்கிறது.
வருங்காலம் நிச்சயமாக இந்தியா உடையது தான், மிகப்பெரிய ஜன நாயக நாடாக இருக்கும் இந்தியாவிற்கு இது ஒரு பெருமைப்பட வேண்டிய விஷயம். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவிற்கும் தற்போதைய இந்தியாவிற்கும் உள்ள வளர்ச்சி அசாத்தியமானது.
இந்தியா-ரஷ்யா உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த உறவு பல வருடங்களாக எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நீடித்து வருகிறது, நாங்கள் எங்களுக்குள் எப்பொழுதும் ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறோம். எதிர்காலத்திலும் இந்த உறவு தொடரும் என்று நம்புகிறேன் என்று புதின் கூறியுள்ளார்.