18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று முதல் தொடக்கம்.
நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கி வந்த நிலையில்,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாநில அரசுகள் நிதி செலுத்தி தடுப்பூசியை வாங்கி வந்தன.
இதற்கிடையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார்.அந்த உரையில், மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவு செய்ய தேவையில்லை. ஏனெனில்,ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்கவுள்ளது.
எனவே,இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை, மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில்,மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.அதன்படி,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் இலவச தடுப்பூசி வழங்கப்படும்.
மேலும்,இணையதள முன்பதிவு இல்லாமல் நேரில் சென்று தடுப்பூசி போடும் நடைமுறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…