” பாகிஸ்தான் ஆதாரம் கேட்பது நொண்டி சாக்கு ” வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்…!!
- புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் எவ்விதமான திறன்களும் , வருத்தமும் தெரிவிக்கவில்லை .
- புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ஆதாரம் கேட்பது நொண்டி சாக்கு என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இதுக்கும் , பாகிஸ்தானுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறி தகுந்த ஆதாரம் கேட்கின்றார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணைய பக்கத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கவில்லை , உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கும் இரங்கல்தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அதில் கூறியதாவது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கமும் அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது உலகம் அறிந்த உண்மை என்பதை பாகிஸ்தான் பிரதமர் உணரவில்லையா என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.