தெலுங்கானாவை புரட்டிப்போட்ட வெள்ளம்! ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதம் – தெலுங்கானா முதல்வர்

Default Image

தெலுங்கானாவில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால், 5 ஆயிரம் கோடிக்கும் மேல் சேதம்.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. இந்த வெள்ளத்தில் தலைநகரம் ஹைதராதாபாத் உட்பட, பல பகுதிகள் வெள்ளத்தில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இதனால், பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி வெள்ளத்திற்கான உரிய உதவிகள் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால், 5 ஆயிரம் கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக  பணிகளுக்காக ரூ.1,350 கோடி வழங்குமாறு  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்