குழந்தைகளின் படிப்புக்காக தனது தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதலே பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றன. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கருதி தமிழக அரசு தொலைக்காட்சி மூலம் பாடங்களை கற்பிக்க வழிவகை செய்துள்ளது.
இதனை கர்நாடக அரசும் பின்பற்றுகிறது. இருந்தாலும் தொலைக்காட்சி கூட இல்லாத சில வீடுகளும் இருக்கின்றன என புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள கடக் எனும் மாவட்டத்தில் உள்ள ராடார் நாகனூர் எனும் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவர் தினசரி கூலி செய்து தனது இரு குழந்தைகளையும் பராமரித்து வருபவர். பள்ளியிலிருந்து கஸ்தூரியை தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் டிவி வழியாக குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கப்படும் என கூறியதை கேட்டு தனது கழுத்தில் இருந்த தனது தாலியை இருபதாயிரம் ரூபாய்க்கு விற்று அதில் 14 ஆயிரம் ரூபாய்க்கு டிவி வாங்கி உள்ளார் கஸ்தூரி.
இதுகுறித்துக் அவர் கூறுகையில், எனது குழந்தைகள் பாடம் கற்பதற்காக உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பு எனக்கு விருப்பமில்லை. டிவி அத்தியாவசியமான ஒன்று தான், எனவே வேறு வழியில்லாமல் எனது தாலியை விற்று நான் குழந்தைகளுக்காக டிவி வாங்கி உள்ளேன். எனது கணவருக்கும் தற்பொழுது வேலை இல்லை என அவர் கூறியுள்ளார். குழந்தைகளுக்காக தாய் செய்துள்ள இந்த அர்ப்பணிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…