சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் முன்பதிவு மையங்கள் செயல்படும்!
சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் என்கவுண்டர்கள் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக அரசு கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து இருந்ததால் போக்குவரத்து அனைத்துமே தடைசெய்யப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் இ பாஸ் அனுமதி மூலம் வெளியூர்களுக்கு செல்ல ரயில் மற்றும் பேருந்துகள் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்பொழுது இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 7ஆம் தேதி முதல் பயணி ரயில்களை தமிழகத்தில் இயக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுண்டர்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.