18th Loksabha Session Start today [File Image]
டெல்லி: கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியை கைப்பற்றி நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மோடி 3.O நிகழ்வுக்கு பிறகு இன்று, 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
இன்றும் நாளையும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர். நாளை தமிழக எம்பிக்கள் பதவி ஏற்க உள்ளனர். இன்று பதவி ஏற்கும் பிரதமர் மோடி மற்ற அமைச்சர்கள் உட்பட 280 உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகராக குடியரசு தலைவரால் அறிவிக்கப்பட்ட பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தப் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
அதனை அடுத்து , நாளை மீதமுள்ள 263 உறுப்பினர்களும் பதவி பிரமாணம் செய்துகொள்ள உள்ளனர். இதனை அடுத்து வரும் 26ஆம் தேதி புதிய மக்களவை சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தான் மக்களவை சபாநாயகர் பொறுப்பை பாஜக தன்வசம் வைத்துக்கொள்கிறதா அல்லது NDA கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கிறதா என்பது தெரியவரும்.
மக்களவை சபாநாயகர் தேர்தல் முடிந்து அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்படும். அதனை அடுத்து, வரும் ஜூன் 27ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மக்களவையில் உரையாற்றி 18வது மக்களவை கூட்டத்தொடர் நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…