மோடி 3.O.! 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் இன்று முதல் தொடக்கம்…

18th Loksabha Session Start today

டெல்லி: கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியை  கைப்பற்றி நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மோடி 3.O நிகழ்வுக்கு பிறகு இன்று, 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

இன்றும் நாளையும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர். நாளை தமிழக எம்பிக்கள் பதவி ஏற்க உள்ளனர். இன்று பதவி ஏற்கும் பிரதமர் மோடி மற்ற அமைச்சர்கள் உட்பட 280 உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகராக குடியரசு தலைவரால் அறிவிக்கப்பட்ட  பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தப் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

அதனை அடுத்து , நாளை மீதமுள்ள 263 உறுப்பினர்களும் பதவி பிரமாணம் செய்துகொள்ள உள்ளனர்.  இதனை அடுத்து வரும் 26ஆம் தேதி புதிய மக்களவை சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தான் மக்களவை சபாநாயகர் பொறுப்பை பாஜக தன்வசம் வைத்துக்கொள்கிறதா அல்லது NDA கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கிறதா என்பது தெரியவரும்.

மக்களவை சபாநாயகர் தேர்தல் முடிந்து அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்படும். அதனை அடுத்து, வரும் ஜூன் 27ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மக்களவையில் உரையாற்றி 18வது மக்களவை கூட்டத்தொடர் நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்