இன்று விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்..!
இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செயற்கைக்கோள்களை வடிவமைத்து, ராக்கெட் உதவியுடன் விண்ணில் நிறுத்தி வருகிறது. இந்த நிலையில்,ஐதரபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது.
இந்த ராக்கெட், மூன்று ராக்கெட்களை சுமந்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்தில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.