மகாராஷ்டிராவில் இன்று முதல் வழிப்பாட்டு தலங்கள் திறப்பு.!
மகாராஷ்டிராவில் இன்று முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள், வழிப்பாட்டு தலங்கள் , சுற்றுலா தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.தற்போது ஒரு சில இடங்களில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .அதன் விளைவாக திரையரங்குகளும், சுற்றுலா தலங்களும் , வழிப்பாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது.எனவே 8 மாதங்களுக்கு பின் இன்று முதல் அங்கு வழிப்பாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது .எனவே மசூதிகள் ,தேவலாயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிப்பாட்டு தலங்களும் இன்று முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் .
மேலும் தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும்,அரசு கூறியுள்ள அனைத்து கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி இன்று மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.