மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.
5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்த முதல் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தீவிரமாக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளதால் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. காலில் அடிப்பட்ட போதும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டம் – மார்ச் 27, 2-ம் கட்டம் -ஏப்ரல் 1 , 3-ம் கட்டம்- ஏப்ரல் 6, 4-ம் கட்டம்-ஏப்ரல் 10, 5-ம் கட்டம்-ஏப்ரல் 17, 6-ம் கட்டம்-ஏப்ரல் 22, 7-ம் கட்டம்- ஏப்ரல் 26, 8-ம் கட்டம்-ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கும், 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், 3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மட்டும் மே 2-ஆம் தேதி ஒரே நாளில் ஐந்து மாநிலங்களுக்கும் நடைபெற உள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…