உலக கோப்பை முதல் போட்டி! 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கும் பாஜக?

free ticket

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்தியா உள்பட அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகி வருகின்றனர். அக். 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதிவரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகள் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் விற்பனையும் ஆன்லைனில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை இரவு 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி மற்றும் தொடக்க விழாவில் பங்கேற்க 40,000க்கும் மேற்பட்ட பெண்களை பாஜக திரட்ட உள்ளது. அதாவது, அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில், வரும் 5ம் தேதி நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியை (இங்கிலாந்து – நியூசிலாந்து) காண மற்றும் நாளை நடைபெற உள்ள தொடக்க விழாவில் பங்கேற்கவும் 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட்(பாஸ்) மற்றும் உணவு வழங்க பாஜக ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அகமதாபாத் மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் இருந்து, வார்டுக்கு சுமார் 800 பெண்கள் வீதம், 40,000 பெண்கள்  செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகள் நகரம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வாட்ஸ்அப் அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளனர். அதில், இந்த சலுகை பெண்களுக்கு மட்டுமே, அதற்காக தங்களைப் பதிவு செய்ய, தங்கள் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்ணை வாட்ஸ்அப்பில் பொதுச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, தொடக்க விழாவிற்கு பதிவு செய்தவர்கள் நாளை மறுநாள் நடைபெறும் முதல் போட்டியை காண வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்ச் பாஸ் தவிர, போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு டீக்கு இரண்டு டோக்கன்களும், சிற்றுண்டிக்கு ஒரு டோக்கனும், உணவுக்கு ஒரு டோக்கனும் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. எனவே, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு 40,000 பெண்களை அழைத்துச் செல்ல அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்