முதல் நாளே அமளி ! ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை
தொடங்கிய முதல் நாளே மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.மக்களவை மற்றும் மாநிலங்களவை நடைபெற்றது.மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலும், மாநிலங்களவை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்றது.
இரு அவைகளிலும் மறைந்த முன்னாள் அமைச்சர்கள் அருண் ஜெட்லீ,சுஸ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.தொடந்து மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது.சிவசேனா கட்சி . மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கான நிவாரணம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.தொடர்ந்து மாநிலங்களவையில் கூச்சல் நிலவி வந்த நிலையில் அவையை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.