மகாராஷ்டிராவில் நாளை முதல் 5 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கம் – மத்திய ரயில்வே
மகாராஷ்டிராவில் நாளை முதல் ஐந்து சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக மத்திய ரயில்வே நேற்று அறிவித்தது. இந்த ஐந்து சிறப்பு ரயில்களில் இரண்டு மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் புனே இடையே இயக்கப்படும்.
செப்டம்பர் -30 அன்று வெளியிடப்பட்ட தளர்வு வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா அரசு உள்மாநில வழித்தடங்களில் ரயில்களை இயக்க அனுமதித்ததால் இந்த அறிக்கை வந்துள்ளது.
ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 8 முதல் தொடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் கொண்ட பயணிகள் மட்டுமே இந்த சிறப்பு ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.