பட்ஜெட்டில் இம்முறை குறைந்த நேரம் எடுத்துக்கொண்ட நிதியமைச்சர்.., எவ்வளவு நேரம் தெரியுமா ..?

Published by
Castro Murugan

இதுவரை 4 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறையே  குறைந்த நேரம் எடுத்துக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். நேற்று பொருளாதார ஆய்வைத் தொடர்ந்து இன்று  கொரோனாவின்  மூன்றாவது அலைக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூனியன் பட்ஜெட் தாக்கலை  இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை  நிர்மலா சீதாராமன் 92 நிமிடங்கள் (1 மணி நேரம் 32 நிமிடம் )  உரையாற்றினார். இதுவரை 4 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறையே  குறைந்த நேரம் எடுத்துக்கொண்டுள்ளார். 2020 பட்ஜெட் உரையில் சீதாராமன் 160 நிமிடங்கள் ( 2 மணி நேரம் 40 நிமிடம் ) பேசினார். இது இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட நேரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையாக கருதப்படுகிறது.

இந்த பட்ஜெட் உரை ஜூலை 2019-ல் அவரது சொந்தச் சாதனையை முறியடித்தது. ஜூலை 2019-ல் அவரது முதல் பட்ஜெட்  2 மணி நேரம் 17 நிமிடங்கள் பேசினார்.

  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-2020 பட்ஜெட்டில் 2 மணி நேரம் 15 நிமிடம் (135 நிமிடங்கள் )
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-2021 பட்ஜெட்டில் 2 மணி நேரம் 42 நிமிடம் (162 நிமிடங்கள் )
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 பட்ஜெட்டில் 1 மணி நேரம் 50 நிமிடம் (110 நிமிடங்கள் )
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023 பட்ஜெட்டில் 1 மணி நேரம் 32 நிமிடம் (92 நிமிடங்கள் )

பொதுவாக பட்ஜெட் உரைகள் 90-120 நிமிடங்கள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Castro Murugan

Recent Posts

சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…

25 minutes ago

பாம்பன் புதிய ரயில்வே பாலம் இன்று திறப்பு: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…

46 minutes ago

PBKS vs RR : பஞ்சாபை பந்தாடிய ராஜஸ்தான்! 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

12 hours ago

PBKS vs RR : பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த ராஜஸ்தான்! வெற்றிக்கு 206 ரன்கள் டார்கெட்!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

14 hours ago

“சினிமாவில் அவர் CM ஆகலாம்., ஆனால் நிஜத்தில்.?” மீண்டும் விஜயை சீண்டிய பவர்ஸ்டார்!

சென்னை  : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…

14 hours ago

CSK vs DC : மீண்டும் சொதப்பல்.. மீண்டும் தோல்வி! டெல்லியிடம் வீழ்ந்த சென்னை!

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…

16 hours ago