பட்ஜெட்டில் இம்முறை குறைந்த நேரம் எடுத்துக்கொண்ட நிதியமைச்சர்.., எவ்வளவு நேரம் தெரியுமா ..?
இதுவரை 4 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறையே குறைந்த நேரம் எடுத்துக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். நேற்று பொருளாதார ஆய்வைத் தொடர்ந்து இன்று கொரோனாவின் மூன்றாவது அலைக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூனியன் பட்ஜெட் தாக்கலை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 92 நிமிடங்கள் (1 மணி நேரம் 32 நிமிடம் ) உரையாற்றினார். இதுவரை 4 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறையே குறைந்த நேரம் எடுத்துக்கொண்டுள்ளார். 2020 பட்ஜெட் உரையில் சீதாராமன் 160 நிமிடங்கள் ( 2 மணி நேரம் 40 நிமிடம் ) பேசினார். இது இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட நேரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையாக கருதப்படுகிறது.
இந்த பட்ஜெட் உரை ஜூலை 2019-ல் அவரது சொந்தச் சாதனையை முறியடித்தது. ஜூலை 2019-ல் அவரது முதல் பட்ஜெட் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் பேசினார்.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-2020 பட்ஜெட்டில் 2 மணி நேரம் 15 நிமிடம் (135 நிமிடங்கள் )
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-2021 பட்ஜெட்டில் 2 மணி நேரம் 42 நிமிடம் (162 நிமிடங்கள் )
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 பட்ஜெட்டில் 1 மணி நேரம் 50 நிமிடம் (110 நிமிடங்கள் )
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023 பட்ஜெட்டில் 1 மணி நேரம் 32 நிமிடம் (92 நிமிடங்கள் )
பொதுவாக பட்ஜெட் உரைகள் 90-120 நிமிடங்கள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.