பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் – யுஜிசி
பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை வருகிறது. அதன்படி கடந்த 3 மாதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும், சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இறுதி ஆண்டு தேர்வுகள், 2020 செப்டம்பர் இறுதிக்குள் ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் முறையில் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானிய ஆணையம் அறிவித்துள்ளது.