புதிய கல்விக்கொள்கை அல்ல, புல்டோசர் கல்விக்கொள்கை- வைகோ குற்றச்சாட்டு
புதிய கல்விக்கொள்கை மாநில அரசுகளின் உரிமைகளை தரைமட்டமாக்கும் புல்டோசர் கல்விக்கொள்கை என்று வைகோ தெரிவித்துள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையைவெளியிட்டது.இந்த புதிய கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனைத்தொடர்ந்து 3 -வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.மேலும் இந்த கல்வி கொள்கை இந்தமாத இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது புதிய கல்வி கொள்கை குறித்து கேள்வி வந்தது.அப்பொழுது மதிமுக பொதுச்செயலாளரும் .எம்.பி.யுமான வைகோ பேசினார்.அவர் பேசுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ளது புதிய கல்விக்கொள்கை அல்ல.மாநில அரசுகளின் உரிமைகளை தரைமட்டமாக்கும் புல்டோசர் கல்விக்கொள்கை என்று மாநிலங்களவையில் வைகோ குற்றச்சாட்டினார்.