நம் அண்டை நாடான சீனாவால் நம் நாட்டில் அடிக்கடி இணைய வழித் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சீனாவுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட திறன் பேசி செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திறந்த நம்பகமான நியாயமான மற்றும் பாதுகாப்பான இணைய சுற்றுச்சூழலை உருவாக்குவதில், இந்தியாவும் ஜப்பானும் உறுதியாக உள்ளன. இதன் ஒரு கட்டமாக இணைய பாதுகாப்புத் துறையில் இந்தியா – ஜப்பான் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கு பாரத பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாக ஐ.நா சபை உட்பட சர்வதேச அரங்கங்களில் இருதரப்பும் ஒத்துழைப்பை உறுதிபடுத்தியுள்ளோம். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உள்கட்டமைப்பு பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் மேலும் வலுபடுத்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…