105 கி.மீ சைக்கிளில் மகனை அழைத்து சென்று படிப்பின் முக்கியதுவத்தை உணர்த்திய தந்தை!

Default Image
தேர்வு எழுதுவதற்காக 105 கிலோமீட்டர் சைக்கிளில் மகனை வைத்து அழைத்து சென்ற தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தார் எனும் மாவட்டத்தை சேர்ந்த பேடிபூர் எனும் கிராமத்தில் வசித்து வருபவர் தான் ஷோபிராம். இவரது மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி கொண்டிருந்துள்ளார். ஏற்கனவே இவன் ஒரு தேர்வு எழுதி அதில் தோல்வியுற்ற நிலையில், தற்போது மத்திய பிரதேச மாநில அரசுகள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வை நடத்த ருக் ஜன நாஹி எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான தேர்வு மையம் தார் எனும் நகரில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வசிக்கும் பேடிபூர் கிராமத்திலிருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் தார்நகர் உள்ளது. ஆனால் தற்பொழுது கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது, இருப்பினும் தனது மகனது படிப்பு வீணாகிவிடக் கூடாது என்பதற்காக பேடிபூர் கிராமத்திலிருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தார் நகரத்திற்கு தனது சைக்கிளில் உட்கார வைத்து அழைத்து சென்றுள்ளார் தந்தை. இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே முதல் முயற்சியில் தேர்ச்சி பெற முடியாத பாடங்களை எழுதுவதற்கு அரசு இன்னொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த கொரானா வைரஸ் சூழ்நிலை காரணமாக போக்குவரத்து வசதிகள் கிடைக்கவில்லை. அதற்காக அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பினைத் தவற விட்டிருந்தால் எனது மகனின் ஒரு வருட கல்வி ஆண்டு வீணாக போய் இருக்கும்.
எங்களிடம் பணம் வசதி, ஒரு மோட்டார் சைக்கிள் கூட கிடையாது. உதவுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் மகனின் வாழ்க்கை மேம்படுத்துவதற்கு என்னுடைய முயற்சியாக சைக்கிளில் வைத்து அவனை அழைத்து வந்தேன். இரண்டு மூன்று நாட்கள் இந்த இடத்தில தங்குவதற்கு ஏற்ற வகையில் உணவு பொருட்களை எங்களுடன் எடுத்து வந்திருக்கிறேன். திட்டமிட்டபடி தேர்வு மையத்திற்கு சென்று விட்டோம் எனவும் அவர் சந்தோசத்துடன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்