ஆந்திராவில் மகனின் உடலை கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர் அதிகப்படியான பணம் கேட்டதால், இருசக்கர வாகனத்தில் வைத்தே கொண்டு சென்ற தந்தை.
ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெத்வேல் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா சிறுநீரகம் பாதிக்கப் பட்ட நிலையில், ரூயா என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து தனது மகனின் உடலை மருத்துவமனையிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸை அணுகியுள்ளார். அவர்கள் சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல அதிகப்படியான பணம் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க இயலாததால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகனின் உடலை தனது உறவினர் ஒருவரின் பைக்கில் வைத்து 90 கிலோமீட்டர் எடுத்து சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் வைத்தே இறந்த மகனின் உடலை தந்தை சுமந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…