மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த 34வயதான நபரை, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கைது செய்தனர்.
உலகம் முழுவதும் பல இடங்களில் சிறுமிகள் உட்பட பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள புனேவில் 34 வயதான நபர் தனது மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மும்பை பிம்ப்ரி – சின்ச்வாட் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் கூற்றுப்படி, குற்றச்சாட்டப்பட்ட அந்த நபர் தனது வீட்டில் வைத்து மகளை 15 நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அது மட்டுமின்றி கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது வீட்டின் அருகிலுள்ள காலியான கியோஸ்க்கு அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இது குறித்து திகி காவல்நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் தனது கார்களை பல்வேறு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டுபவர் என்றும், புகார் கொடுத்தவர் அவரது மனைவி என்றும் கூறியுள்ளார். அதனையடுத்து சனிக்கிழமையன்று குற்றச்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இந்திய தண்டனை சட்டமான 376,376(2) (f) பிரிவுகளின் கீழ் 3,4,7 ஆகிய பிரிவுகளையும், போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…