குஜராத்தில் 8 வயது சிறுவன் உணவு உட்கொள்ளவில்லை என தந்தை அடித்ததில் பரிதாபமாக உயிரிழப்பு.
நேபாளத்தைச் சேர்ந்த குடும்பம், குஜராத்தின் கலாவாட் சாலையில் உள்ள ராணி கோபுரத்திற்கு அருகிலுள்ள நந்தன்வன் சொசைட்டியில் வசித்து வருகிறது. இந்நிலையில் சித்தராஜ் என்பவர், அவரது மகனான சவுரப்பை (8) மாலையில் உணவு உட்கொள்ள வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால், சிறுவன் சவுரப் உணவு உட்கொள்ள மறுத்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் தந்தை, சிறுவனை குச்சியால் கடுமையாக தாக்கியுள்ளார். வீட்டை விட்டு வெளியே ஓடிய சிறுவன் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து நேரம் செல்ல செல்ல சிறுவனின் உடல்நிலை மோசமைடைந்துள்ளது.
இந்நிலையில், சிறுவனை ராஜ்கோட்டில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். குழந்தையின் உடலில் பல காயங்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து சவுரபின் தந்தையிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் சிறுவன் விளையாடும்போது விழுந்து தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக கூறினார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், சிறுவனை குச்சியால் அடித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சித்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…