குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் கட்டர்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (48) (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) ஜவுளி தொழிலதிபர். இவர் மகனுக்கும் நவ்ஸரி பகுதியை சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் மகளுக்கும் கடந்த வருடம் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இவர்களின் திருமணத்தை வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருந்தது.இந்நிலையில் இருவீட்டினரும் அடிக்கடி பேசி, பழகி வந்து உள்ளனர்.இதில் மணமகனின் தந்தை ராஜேஷ் , மணமகளின் தாய் சிந்து (வயது 46). (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) இவர்கள் இருவரும் ஏற்கனவே நண்பர்களக இருந்து உள்ளனர்.
இதையெடுத்து கடந்த 10-ம் தேதியில் இருந்து மணமகனின் தந்தை ,மணமகளின் தாயும் காணவில்லை. இதனால் இரு குடும்பத்தினரும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர். இவர்கள் காணாமல் போனதால் இவர்கள் பிள்ளைகளின் திருமணம் நின்றுவிட்டது.
சிந்து , ராஜேஷ் இருவரும் திருமணத்திற்கு முன்பே நெருக்கமாக பழகி வந்து உள்ளனர். பின்னர் சிந்து ஒரு வைர கைவினைஞரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…