விபத்தில் மகன் உயிரிழந்த பின் இளம் வயதில் விதவையான தனது மருமகளுக்கு சீதனத்தை அள்ளி கொடுத்து மறுமணம் செய்து வைத்து நெகிழவைக்கும் மாமனார்.
இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் பல இடங்களில் மாமியார் மாமனாருக்கு வாழ்நாளை வேலை செய்தே கழிக்கின்றனர். ஆனால், ஆண்கள் தங்கள் மனைவியை இழந்துவிட்டால் உடனடியாக மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள், பெண்களுக்கு அந்த சுதந்திரம் இன்று வரையிலும் பல இடங்களில் கிடைக்கவில்லை என்று தான் சொல்லியாக வேண்டும். ஆனால், மத்யப்ரதேசத்தில் மாமனார் ஒருவர் தனது மருமகளுக்கு செய்து வைத்துள்ள மறுமணம் பலரையும் நெகிழ வைக்கிறது.
ஆம், மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்துவரக்கூடிய ரவிசங்கர் என்பவரது மகன் சஞ்சய் சரிதா எனும் பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் ரவியின் மகன் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது மருமகள் இளம் வயதில் விதவையாக்கப்பட்டுவிட்டாலே எனும் வருத்தத்தில் இருந்த சரிதாவின் மாமனார், அப்பெண்ணின் குடும்பத்தார் சம்மதத்துடன் மணமகன் தேட ஆரம்பித்துள்ளார்.
அப்பொழுது ஏற்கனவே தனது மனைவியை இழந்து மருமணத்திற்காக காத்திருந்த ராஜேஷ் சோனி என்பாரை கண்டறிந்து, அவர் சம்மதம் தெரிவிக்கவே அனைவர் சம்மதத்துடனும் திருமணத்தை ரவி நடத்தி வைத்துள்ளார். ஆனால், சாதாரணமாக இல்லை கார், கழுத்து நிறைய நகைகள் மற்றும் ரொக்க பணம் என அள்ளிக்கொடுத்து தனது மருமகளுக்கு கவுரவமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் ரவி. மாமனாரின் இந்த நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…