தீவிரிக்கும் விவசாயிகள் போராட்டம் – வரும் 18 ஆம் தேதி ரயில் மறியல் ஆர்ப்பாட்டம்!
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக வருகின்ற 18 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு.
டெல்லியில் ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக யோசித்து பல விதமான வழிகளில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் கூட 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தியிருந்தனர். தற்பொழுது ரயில் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சம்யுக்தா கிஸான் மோர்ச்சா சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளால் நடத்தப்படும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக வருகின்ற 18 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாகவும், ராஜஸ்தானில் வருகின்ற 12 ஆம் தேதி முதல் அதாவது நாளை சுங்கச்சாவடிகளை மறித்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.