நடு ரோட்டுல போராட்டக்களத்தில கரண்ட் தயாரித்த விவசாயி.!

Default Image

நெடுஞ்சாலையில் மின்சாரத்தை உருவாக்கி, அதனை சாத்தியமாகியுள்ளார் டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி ஒருவர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில், விவசாயிகள் பல சவால்களை சந்திக்கின்றனர். அதிலொன்று மின்சாதனங்களை சார்ஜ் செய்வது. போராட்ட களத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் உறவினர்களை தொடர்புகொள்ள வைத்திருக்கும் முக்கிய சாதனம் செல்போன். அதற்கு அடிப்படை ஆதாரம் மின்சாரம் தேவை.

நெடுஞ்சாலைகளில் போராடும் விவசாயிகளுக்கு மின்சாரம் வசதி கிடைப்பது கடினமான ஒன்று. ஆனால், நெடுஞ்சாலையில் மின்சார வசதியை கொண்டு வந்த பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஷா சாந்தர். முதலில் அவர் எடுத்து வந்திருந்த டிராக்டரில் உள்ள பேட்டரிகளின் மூலமாக மின்சாரம் தயாரித்து செல்போன்களை சார்ஜ் செய்தார். ஆனால், பேட்டரிகள் தொடர்ந்து இயங்க ட்ராக்டர் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது அவசியம். அதனால் அந்த முயற்சியை கைவிட ஷா சாந்தருக்கு புதிய யோசனை கிடைத்தது.

ஊரிலிருந்து சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் தகடுகளை வரவழைத்து பரிசோதித்து பார்த்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தற்போது இவர் பயன்படுத்தியது போக மற்றவர்களுக்கும் மின்சாரத்தை வழங்கி உதவி செய்து வருகிறார். மேலும் 120 சார்ஜர்களை வாங்கி தனது டிராக்டரில் பொருத்திவிட்டு, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதனை பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்துள்ளார் ஷா சாந்தர்.

செல்போன்கள் மட்டுமில்லாமல் மின்விளக்குகள், ஸ்பீக்கர்கள், மின்சார அடுப்புகள் என பலவற்றை இதன்மூலம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார் இந்த விவசாயி. இவரின் இந்த வழிமுறையை பின்பற்றி மேலும் சில ட்ராக்டர்கள் சோலார் ட்ராக்டர்களாக மாறியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்