கொரோனாவிற்கு பயந்து ஒன்றரை வருடமாக வீட்டை விட்டு வெளியே வராத குடும்பம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, பலர் மீண்டு வந்திருந்தாலும், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸானது, மக்கள் மத்தியில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், சீனிவாசலு என்ற விவசாயி, தனது மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்களுடன் கூடாரம் அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் கொரோனாவிற்கு பயந்து ஒன்றரை வருடமாக வெளியே வராமல் இருந்துள்ளனர். வீட்டிற்கு தேவையானவற்றை அவரது மகன் மட்டும் வாரத்திற்கு ஒருமுறை வெளியே சென்று வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டுமனை பட்டா அளிப்பதற்காக, வட்டாட்சிய அலுவலக ஊழியர்கள் அங்கு சென்றனர். ஆனால், அதனை பெற்றுக் கொள்ள அவர்கள் கூடாரத்தை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து, அவர்களை போலீசார் உதவியுடன் வெளியே அழைத்த வந்துள்ளனர். குடும்பத்தார் அனைவரும், மெலிந்த நிலையில், உடல்குன்றிய நிலையில் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…