அதிர்ச்சி!! ஐஸ்கிரீமில் கிடந்த விரல்.. டிஎன்ஏ ரிப்போர்ட்டில் வெளியே வந்த உண்மை!

ice cream - Yummo

மகாராஷ்டிரா : புனே மாவட்ட மலாட் பகுதியில் ஐஸ்கிரீமில் மனித விரல் துண்டு கிடப்பதை கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது Yummo என்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு சொந்தமானது என்பது காவல்துறையினரால் பெறப்பட்ட டிஎன்ஏ அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் 12ஆம் தேதி ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் துண்டு இருப்பதை மலாட் பகுதியை சேர்ந்த MBBS மருத்துவர் பிராண்டன் செர்ராவ் கண்டுபிடித்தபோது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, மருத்துவரின் புகாரைத் தொடர்ந்து, Yummo ஐஸ்கிரீம் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மலாட் காவல் நிலையத்தைச் சேர்ந்த குழு இந்தாபூரில் உள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலைக்குச் சென்று, விசாரணை மேற்கொண்டதில், அங்கிருக்கும் ஊழியர் ஒருவருக்கு விரல் துண்டிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆம், புனேவைச் சேர்ந்த 24 வயதான ஓம்கார் போட் என அடையாளம் காணப்பட்ட ஊழியர், மே 11 அன்று புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூரில் உள்ள ஃபார்ச்சூன் பால் தொழிற்சாலையில், ஐஸ்கிரீம் கோன்களை நிரப்பும் போது தனது விரல் நுனியை இழந்தார் என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், அவரது டிஎன்ஏ மற்றும் ரத்த மாதிரிகளைச் சேகரித்து, ஐஸ்கிரீம் கோனில் கண்டெடுக்கப்பட்ட மனித விரலையும், ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து அந்த விரல் அவனுடையதுதானா என்பதை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஐஸ்கிரீமில் இருந்த விரலும், ஊழியரின் டிஎன்ஏவும் ஒத்துப்போனது. இந்நிலையில், ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட விரல் துண்டு ஊழியருடையது என்பது உறுதியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்