அரசியல் சாசன பிரதியை கிழிக்க முயன்ற எம்.பிக்கள் வெளியேற்றம்!
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார்.அந்த அறிவிப்பில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து என அறிவித்தார்.
இதற்கு குடியரசு தலைவர் ரத்து செய்யும் முடிவுக்கு அனுமதி கொடுத்து உள்ளார்.இதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் ,திமுக மற்றும் போன்ற கட்சிகள் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல் சாசன பிரதிகளை கிழிக்க முயன்றதாக பிடிபி எம்.பிக்கள் மிர் பயாஷ் மற்றும் நஸிர் அகமது இருவரையும் மாநிலங்களவையில் இருந்து வெளியேற வேண்டும் என வெங்கையா நாயுடு உத்தரவு விட்டார். மேலும் இந்த இரண்டு எம்பிக்களின் செயலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் கண்டனம் தெரிவித்தார்.