BREAKING: பெட்ரோல் ₹5, டீசல் ₹10 குறைப்பு நாளை முதல் அமல்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி நாளை முதல் முறையே ₹ 5 மற்றும் ₹ 10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது.எரிபொருள் விலையேற்றத்தின் பாதிப்பால் தத்தளிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.
டீசல் மீதான கலால் வரி குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக குறைக்கப்பட உள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இரு எரிபொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.