அபிநந்தன் எதிர்கொண்ட சம்பவங்கள்!!பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் !!ராஜஸ்தான் கல்வி அமைச்சர்

Published by
Venu
  • இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
  • அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் அடுத்த கல்வியாண்டு முதல்  பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று  ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டஸ்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின்  மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை  அழித்தது.அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வந்தது.

பின் பிப்ரவரி-27 ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை விமானமான  F16  இந்தியாவிற்குள் அத்துமீறியபோது இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானத்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.ஆனால் அந்த தாக்குதலின்போது மிக் 21 போர் விமானத்தை காணவில்லை.அதேபோல் விமானியையும் காணவில்லை(விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர்).

Image result for அபிநந்தன்

 

பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கேட்டபோது,  விமானி அபிநந்தன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தது.பின்னர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் இருக்கும் நிலையில் அவரை மீட்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டார்.அதில் அபிநந்தன் நேற்று (மார்ச் 1-ஆம் தேதி) விடுவிக்கப்படுவார்.இம்ரான் கான் அறிவித்தவுடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.

அதன்படி மார்ச் 1-ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூா் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு காா் மூலம் அழைத்து வரப்பட்டாா்.இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடா்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாா்.

இந்நிலையில் அபிநந்தன் தொடர்பாக ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டஸ்ரா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்  அபிநந்தன் எல்லையில் எதிர்கொண்ட சம்பவங்கள் அடுத்த கல்வியாண்டு முதல்  பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று  ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டஸ்ரா தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

25 seconds ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

26 minutes ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

2 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

3 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

3 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

4 hours ago