இந்திய -சீன எல்லை லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில்கடந்த மாதம் 15-ம் தேதி இருநாட்டு வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வந்தது. இதனால், இருநாடுகளும் தங்களது படைகளை குவித்து வந்தன.
இதைத்தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை தொடர்ந்து இருநாட்டு படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று எந்த வித முன் அறிவிப்பு இன்றி பிரதமர் மோடி , தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன் லடாக் சென்றார். நிம்பு பகுதிக்கு சென்ற மோடி அங்கு உள்ள இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, உங்களின் வீரமும், துணிச்சலும் உலகிற்கு இந்தியாவின் வலிமையைப் பறைசாற்றியுள்ளது. உங்களின் வீரம் இந்த மலையின் உச்சியைவிட உயர்ந்தது.
இந்தியாவின் எதிரிகள் அனைவரும் உங்களின் வேகத்தையும், சீற்றத்தையும் பார்த்துவிட்டார்கள். மேலும், ஒரு நாடு தனது விரிவாக்கத்தின் சகாப்தம்” முடிந்துவிட்டது என்றும் இது வளர்ச்சிக்கான நேரம் என்றும் ராணுவ வீரர்களிடையே உரையாற்றினார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…