அத்துமீறி குடியரசுத் தலைவரின், பாதங்களைத் தொட முயன்ற என்ஜினீயர் சஸ்பெண்ட்.!
குடியரசுத் தலைவரின் பாதுகாப்பை மீறி அவரது பாதங்களைத் தொட முயன்ற, ராஜஸ்தான் பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 4 அன்று நடந்த ஒரு நிகழ்வின் போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி அவரது பாதங்களை தொட முயன்ற, ராஜஸ்தான் பொறியாளர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் ரோஹெட்டில் ஜனவரி 4 ஆம் தேதி, நடைபெற்ற சாரணர் வழிகாட்டி ஜம்போரியின் தொடக்க நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது பொது சுகாதாரப் பொறியியல் துறை பொறியாளர் அம்பா சியோல், குடியரசுத் தலைவரின் பாதங்களைத் தொடும் முயற்சியில், ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் விதியின் கீழ் நெறிமுறைகளை மீறியிருந்தார். குடியரசுத்தலைவரை வரவேற்கும் வரிசையில் நின்று கொண்டிருந்த அவர், திடீரென்று முன்னேறி, குடியரசுத்தலைவரின் கால்களைத் தொட முயன்றார், ஆனால் ஜனாதிபதியின் பாதுகாப்பால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை மத்திய உள்துறை அமைச்சகம் இதனை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, அவரது பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள கடுமையான குறைபாடு எனக் கருதி, ராஜஸ்தான் காவல்துறையிடம் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது.