போராட்டத்தில் சோமாடோ டி-சர்ட்டை எரித்த ஊழியர்.!

Published by
murugan

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி  நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதைதொடர்ந்து அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தைநடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்கு பின்னர், நாடு முழுவதும் சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது. இதனால், பல இடங்களிலும் சீனப்பொருட்களை நடுவீதியில் போட்டு உடைத்தும், எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொல்கத்தாவின் பெஹலாவில் சீன பொருள்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், சீன பொருட்களை புறகணிப்போம் என முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சோமாடோ  நிறுவன ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்தும், சோமாடோவில் யாரும் உணவு ஆர்டர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

அப்போது, ஒரு  ஊழியர் ஒருவர் திடீரென சோமாடோ டி-சர்ட்டை தீ வைத்து எரித்தார். அப்போது பேசிய ஒரு ஊழியர் , நாங்கள் பட்டினியாகவும் கிடக்கத் தயார். ஆனால், சீனாவிடம் நிறுவனங்களுக்கு வேலை செய்ய மாட்டோம் என கூறினார். கொரோனா வைரஸ் காரணமாக மே மாதத்தில் சோமாடோ 13% பணியாளர்களை பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

மாநகரம் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? புகைப்படங்களை பார்த்து நொந்து போன ரசிகர்கள்!

மாநகரம் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? புகைப்படங்களை பார்த்து நொந்து போன ரசிகர்கள்!

நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…

18 minutes ago

பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை புகழாரம்!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…

1 hour ago

“பத்திகிச்சு இரு ராட்ச்சஸ் திரி”! துவைத்தெடுத்த கில் – சாய்! லக்னோவுக்கு இது தான் டார்கெட் !

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.   இந்த போட்டியில்…

2 hours ago

அதிமுக – பாஜக கூட்டணியின் தலைமை யார்? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…

3 hours ago

சர்ச்சை பேச்சு! “மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் “-பொன்முடி

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…

4 hours ago

LSGvsGT : டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு! மிட்செல் மார்ஷ்க்கு பதில் இவர் தான்!

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.  போட்டியில்…

4 hours ago