போராட்டத்தில் சோமாடோ டி-சர்ட்டை எரித்த ஊழியர்.!
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதைதொடர்ந்து அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தைநடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்கு பின்னர், நாடு முழுவதும் சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது. இதனால், பல இடங்களிலும் சீனப்பொருட்களை நடுவீதியில் போட்டு உடைத்தும், எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொல்கத்தாவின் பெஹலாவில் சீன பொருள்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், சீன பொருட்களை புறகணிப்போம் என முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சோமாடோ நிறுவன ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்தும், சோமாடோவில் யாரும் உணவு ஆர்டர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
அப்போது, ஒரு ஊழியர் ஒருவர் திடீரென சோமாடோ டி-சர்ட்டை தீ வைத்து எரித்தார். அப்போது பேசிய ஒரு ஊழியர் , நாங்கள் பட்டினியாகவும் கிடக்கத் தயார். ஆனால், சீனாவிடம் நிறுவனங்களுக்கு வேலை செய்ய மாட்டோம் என கூறினார். கொரோனா வைரஸ் காரணமாக மே மாதத்தில் சோமாடோ 13% பணியாளர்களை பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.