யானை தற்செயலாக வெடிமருந்து நிரப்பிய பழத்தை சாப்பிட்டு இருக்கலாம்.!
கேரளா மாநிலம், பாலக்காட்டின் மலப்புரம் சைலண்ட் பள்ளாத்தாக்கில் கடந்த 27 ஆம் தேதி காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். அதனை உண்ட யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பலநாள் அந்த யானை உணவருந்தாமல் இருந்தது. மேலும் அந்த யானை ஆறு ஒன்றில் நின்றபடி உயிரிழந்துள்ளது. யானையின் உடலை மீட்ட வனத்துறையினர், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை முடியில், அந்த யானை கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
இதனிடையே, கடந்த 5ம் தேதி யானை உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுருந்தது. இந்த நிலையில், அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கேரளா வனத்துறை அறிவித்தது. தற்போது உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளிட்டுள்ளது. அதாவது, முதல் கட்ட விசாரணையில் யானை தற்செயலாக வெடிமருந்து நிரப்பிய பழத்தை சாப்பிட்டு இருக்கலாம் என்றும். இப்போதைக்கு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இந்த சட்டவிரோத மற்றும் முற்றிலும் மனிதாபிமானமற்ற செயலில் பங்கேற்றிருக்கக்கூடிய அதிகமான நபர்களை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
Primary investigations revealed, the elephant may have accidentally consumed in such fruit. @moefcc is in constant touch with Kerala Govt & has sent them detailed advisory for immediate arrest of culprits & stringent action against any erring official that led to elephant’s death
— MoEF&CC (@moefcc) June 6, 2020