Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை.
ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் YRS காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அதே போல , எதிர்க்கட்சியாக உள்ள சந்திரசேகர ராவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் 144, 21, 10 தொகுதிகள் முறையில் போட்டியிடுகின்றனர். மக்களவையை பொறுத்த வரையில், 17, 2, 6 ஆகிய தொகுதி எண்ணிக்கை முறைகளில் போட்டியிடுகின்றன.
நேற்று விஜயவாடாவில், உண்டவல்லியில் உள்ள சந்திரசேகர ராவின் இல்லத்தில் வைத்து கூட்டணி தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், விவசாயிகளுக்கு, பெண்களுக்கு , இளைஞர்களுக்கு என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஓய்வூதியம் 4000 ரூபாயாக உயர்த்தப்படும், தன்னார்வலர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
இந்த தேர்தல் அறிக்கையில், தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி தலைவர்கள் புகைப்படம் மட்டுமே இடம்பெற்று இருந்ததாகவும், பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெறவில்லை என்றும் கூறப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், நேற்று விழாவில் கலந்து கொண்ட, ஆந்திர மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் சித்தார்த் நாத் சிங் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை ஏற்க மறுத்து விட்டதும் சர்ச்சையாக மாறியது.
இந்த சம்பவம் குறித்து விமர்சனம் செய்த, YSR காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், தேர்தல் அறிக்கையின் பிரதமர் மோடியின் புகைப்படத்தை விட சந்திரபாபு நாயுடுவின் புகைப்படங்கள் முக்கியமாகக் காட்டப்பட்டுள்ளது, அவர்களின் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு, பாஜக தலைமையகத்தில் இருந்து அவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. அதில் பாஜக வாக்குறுதிகள் எவ்வளவு நிறைவேறாமல் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது என விமர்சனம் செய்தார்.
இந்த தேர்தல் அறிக்கை சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த சந்திரசேகர ராவ், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் தேர்தல் அறிக்கை உள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் ஆலோசித்த பின்னரே நாங்கள் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் களத்தில் அனைத்து கூட்டணி கட்சிகளின் கருத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…