சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது!!அடம்பிடிக்கும் தேர்தல் ஆணையம்

Default Image
  • தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.சித்திரை திருவிழாவை ஒட்டி மதுரையில் தேர்தலை ஒத்திவைக்கக்கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது.வழக்கறிஞர் பார்த்தசாரதி முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை என்று  உயர்நீதிமன்றக்கிளை தெரிவித்தது.

அதன்படி அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.அதில் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது, மதுரையில் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம், ஒத்திவைக்க முடியாது என்று தெரிவித்தது.

Image result for மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது

சித்திரை திருவிழா நடைபெறுவதால் தேர்தலை தள்ளிவைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இன்று  தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தது.

அதேபோல் இன்று நடைபெற்ற விசாரணையில் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில்,  மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று  திட்டவட்டமாக தெரிவித்தது.

இதற்கு  பதில் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீங்கள் முடிவெடுத்துவிட்டால், அதுதான் இறுதியா? தமிழகம் முழுவதும் ஏன் தேர்தல் தேதியை மாற்றக் கூடாது? இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நாளை பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று தெரிவித்து தீர்ப்பை நாளை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்