தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – குலாம்நபி ஆசாத்
டெல்லியில் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு பிரச்சினை பற்றி 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள் .தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. திமுக சார்பில் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்றார்.
பின் 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்கள்.
வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாக,தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த பின் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பேசுகையில்,வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒப்புகை சீட்டை சரிபார்ப்பதாக கூறியதை ஏற்க முடியாது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற்ற கட்சிகளின் கோரிக்கை இது என்று பேசினார்.