இந்திய தேர்தல் ஆணையம் ‘மிஷன் சக்தி’ குறித்த பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்ததாக தெரிவித்தார்.
ஆனால் தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றது.
குறிப்பாக தேர்தல் நேரத்தில் பிரதமர் ஆற்றிய உரை குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் மிஷன் சக்தி திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடியின் உரை குறித்து தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.மேலும் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அளித்த புகாரில், திட்டம் வெற்றியடைந்தது பற்றி சம்பந்தப்பட்ட துறை விஞ்ஞானிகள்தான் அறிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் ‘மிஷன் சக்தி’ குறித்த பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் பிரத்யேக அதிகாரிகள் குழுவை நியமித்து, அவர்களின் நேரடி கண்காணிப்பில் பிரதமரின் உரை உடனே ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…